புதிதாக 20 நிலவு ….. ”சனி கிரகத்தின் அதிசயம்”….. புதிய கண்டுபிடிப்பு ….!!

சனி கிரகத்தை சுற்றி புதிதாக இருபது நிலவுகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Karnikie institution of science நிறுவனத்தை  சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அவரது குழுவினர் சனி கிரகத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்று வட்டப்பாதையில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில்  புதியதாக நிலவுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் சனி கிரகத்தில் உள்ள நிலவுகளில் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. Jupiter எனப்படும் வியாழன் கிரகத்தில் 79 நிலவுகள் இருக்கின்றன. இதனால் தற்போது சனி கிரககம் அதிக  நிலவுகளை கொண்ட கிரகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலவுகள் அனைத்தும் சுற்றிவர இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சனியின் இருபது நிலவுகளுக்கு  பொதுமக்கள் பெயர் சூட்டலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி மக்கள் ட்விட்டர் பக்கத்தில் நேம் என்ற ஹாஸ்டக் பயன்படுத்தி தாங்கள் விரும்பும் பெயரை தெரிவிப்பதோடு அதற்கான விளக்கத்தையும் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பெயர்கள் அனைத்தும் இந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *