2026-ல் முதலமைச்சராக… நடிகர் விஜய் ரசிகர்களால் பரபரப்பு…!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் சுயேட்சையாக களம் இறங்குகின்றனர். அதன்படி உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் ஒன்பது மாவட்டங்களிலும் விஜய் ரசிகர்கள் போட்டியிட உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரையில் அவரது ரசிகர்கள் ஆங்காங்கே பல்வேறு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மதுரை மத்திய தொகுதியில், “2024 ஆம் ஆண்டு மதுரையில் முதல் மாநாடு, 2026 இல் முதலமைச்சராக”என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். மற்றொரு போஸ்டரில் ‘தமிழக அரசியலின் மொத்த உருவமே’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *