பிரபல நடிகர் எஸ்வி சேகர் கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் திமுக தான் மீண்டும் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். இவர் செய்தியாளர்களை சந்தித்தபோது விஜய் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், விஜய் மறுபடியும் அங்கங்கே கூட்டம் அமைத்து சினிமா சூட்டிங் போல் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் என்னும் முழுமையாக அரசியல் களத்திற்குள் வரவில்லை. 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக கூட்டணி தான் முக்கியம்.

தமிழகத்தின் வெற்றி என்பது 3 அல்லது 4 லட்சம் ஓட்டுகள் தான் முடிவாகிறது. தமிழகத்தில் தேர்தல் என்பது ஒரு கணக்கு தான். எனவே யார் சரியான கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்களோ கண்டிப்பாக அவர்களுக்கு தான் வெற்றி கிடைக்கும்.‌ இதனை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை 234 தொகுதிகளிலும் விஜய் போட்டியிடுகிறார் என்றால் கண்டிப்பாக அவரால் புஸ்ஸி ஆனந்தை வைத்துக்கொண்டு ஒன்றுமே செய்ய முடியாது. இது விஜய்க்கும் நன்றாக தெரியும். மேலும் கூட்டணி பலமாக இருந்தால் மட்டும்தான் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியும். தற்போது உள்ள சூழல் நீடித்தால் கண்டிப்பாக அடுத்து வரும் தேர்தலிலும் திமுக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.