தமிழகத்தில் கடந்த தேர்தல்களில் அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி அமைத்த போட்டியிட்ட நிலையில் ‌ நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் தேமுதிக மற்றும் அதிமுக மீண்டும் கூட்டணி அமைக்கும் என்று ஏற்கனவே பிரேமலதா விஜயகாந்த் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், கடந்த 3 வருடங்களாக யாருக்கு அதிகாரம் என்ற போட்டி தான் நடந்து கொண்டிருப்பதாக கூறினார்.

அதன் பிறகு கடந்த காலங்களில் ஆளுநரும் தமிழக அரசும் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில் தற்போது தான் இவர்களுக்குள் ஈகோ பிரச்சனை உருவாகியுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் யாருக்கும் எந்த பயனும் கிடைப்பது கிடையாது. ஒற்றுமையாக சென்றால் நாட்டுக்கு நல்லது. அதன்பிறகு வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடும். மேலும் தேர்தல் நெருக்கம் சமயத்தில் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என்று கூறினார். பிரேமலதா விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி என்று கூறிய நிலையில் தற்போது 234 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடும் என்று கூறியதால் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.