இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற நிலையில் 22 ஆம் தேதி பூமிக்கு திரும்புவதாக இருந்தது. ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் கசிவு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் என போயிங் நிறுவனம் அறிவித்தது.

இதனால் நாசா கவலை அடைந்துள்ள நிலையில் தற்போது ஸ்டார் லைனர் நிறுவனத்தின் உதவியுடன் நாசா அவர்களை பூமிக்கு மீண்டும் அழைத்து வர திட்டமிட்டுள்ளது. அதன்படி டிராகன் கேப்சூல் எனப்படும் விண்கலத்தின் உதவியுடன் அவர்களை அழைத்து வர 4 விண்வெளி வீரர்கள் குழு செல்ல இருக்கிறார்கள். இந்த விண்கலம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்பும் என்று கூறப்படுகிறது. மேலும் இதனால் அவர் 2025 ஆம் ஆண்டில் தான் பூமிக்கு திரும்ப அதிக அளவில் வாய்ப்பு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.