2024 ல் மீண்டும் நானே பிரதமர் வேட்பாளர்…. பிரதமர் மோடி மறைமுக கருத்து…!!!!!!

குஜராத் மாநிலத்தில் பரூச் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நடைபெற்ற விதவைகள், முதியவர்கள் மற்றும் ஆதரவற்ற குடிமக்களுக்கான குஜராத் மாநில அரசு நிதியுதவி திட்டங்களின் பயனாளிகள் நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார். அப்போது முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ஒருவர்  பிரதமர் பதவி பற்றி தெரிவித்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் ஒரு நாள் ஒரு பெரிய தலைவர் என்னை சந்தித்தார். அந்த தலைவர் எங்களை அரசியல் ரீதியாக அடிக்கடி எதிர்த்து வருபவர். மேலும் அவர் மீது எனக்கு மரியாதை இருக்கின்றது. அரசின் சில முடிவுகளில் அவர் மகிழ்ச்சி அடையவில்லை. அதன் காரணமாக என்னை சந்திக்க வந்தார். மேலும் அந்த சந்திப்பில் அவர் சொன்னார் “மோடிஜி இந்த நாடு உங்களை இரண்டு முறை பிரதமராக தேர்வு செய்துள்ளது.

மேலும் இதற்குமேல் இன்னும் என்ன வேண்டும்”. ஒருவர் இரண்டு முறை பிரதமர் ஆனால் அனைத்தையும் சாதித்து விட்டார் என்பது போல் பேசியுள்ளார். அவருக்கு மோடி ஒரு வித்தியாசமான குணங்களால் உருவாக்கப்பட்ட்டவர்  என்பது தெரியவில்லை. இந்த குஜராத்தின் மண் தான் என்னை உருவாக்கியுள்ளது. அதனால்தான் தற்போது நான் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

எனது கனவு நிறைவேறும் வரை நான் ஓய்வு எடுக்க மாட்டேன் என பேசியுள்ளார். இருந்த போதிலும்  தனக்கு அறிவுரை சொன்ன தலைவர் யார் என்பதை பிரதமர் நரேந்திர மோடி கூறவில்லை. இதன் மூலமாக வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளர், என்பதை பிரதமர் நரேந்திர மோடி சூசகமாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *