உலக வானிலையில் அமைப்பானது உலக சுகாதார அமைப்புடன் இணைந்து பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை மேலாண்மை செய்வதற்கான சேவைகள் மற்றும் பருவநிலை, சுற்றுச்சூழல் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றினை மேம்பாடு செய்வதற்கான 2022-23 ஆம் ஆண்டுக்கான அமலாக்க திட்டத்தையும் வடிவமைத்துள்ளது. இந்த திட்டமானது தற்போதுள்ள மற்றும் அதிகரித்து வரும் தீவிர வானிலை நிகழ்வுகள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வினை வழங்குதல் என்ற ஒரு இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.