தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடப்பு ஆண்டில் நடைபெறுவதற்கு தேவையான முன் அனுமதி தொடர்பான விவகாரம் தமிழகத்தில் இருந்தது. இதன் காரணமாக அரசு பல விதிமுறைகளுக்கு உட்பட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படும் காளைகளுடன் அதிகபட்சம் இரண்டு பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அவர்களுக்கு கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் மைதானத்தில் அதிகபட்சமாக 300 பேர் மட்டும் அல்லது மொத்த இருக்கையில் 50 சதவீதம் அளவு பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.