தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவரும் நடிகை திரிஷா பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜயுடன் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் த்ரிஷாவை தனது மனைவி எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார் ஏ எல் சூர்யா. ஆன்மீகம் பற்றி பல பேட்டிகளில் பேசி வந்த அவர் இணையதளத்தில் திரிஷா என் மனைவி என்று கூறுவதோடு அவருடன் நடித்த நடிகர் விக்ரம், விஜய் பற்றி படு கேவலமாக வார்த்தையை பயன்படுத்தி வீடியோவை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிப்பை தாண்டி திரிஷாவுக்கு அரசியலில் நல்ல ஸ்கோப் இருப்பதாகவும் 2023 த்ரிஷா தான் தமிழகத்தின் முதலமைச்சர் என்றும் ஸ்ட்ராங்காக கூறி இருக்கின்றார். இதற்கு திரிஷாவின் ரசிகர்கள் பலர் பைத்தியமா என்று கிண்டல் அடித்தும் திட்டியும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.