“2022-ல் அதிக வசூல்”…. தமிழ் படங்களில் டாப் 4 லிஸ்ட்…. பிரபல விநியோகஸ்தர் சொன்ன தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் சமீப காலமாகவே ரிலீஸ் ஆகும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம், மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம், பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைப்படம் போன்றவைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்நிலையில் 2022-+ம் ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் படங்கள் குறித்த தகவலை பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

அவர் கூறியபடி பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் அதிக வசூலில் முதலிடத்தில் இருக்கிறது. இதனையடுத்து‌ 2-வது இடத்தில் நடிகர் கமலின் விக்ரம் திரைப்படமும்,‌ 3-வது இடத்தில் நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படமும், 4-வது இடத்தில் நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படமும் இருக்கிறது. மேலும் குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படமும் திரையரங்குகளில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்து வருகிறது என திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.