தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். குறிப்பாக இரவு மற்றும் மதிய நேரங்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களை இல்லத்தரசிகள் விரும்பி பார்ப்பார்கள். அதன் பிறகு சன் டிவி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் கடந்த வருடம் சின்னத்திரை சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடத்தை பிடித்த 10 சீரியல்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் முதல் இடத்திலும், 2-ம் இடத்தில் சுந்தரி சீரியலும், 3-ம் இடத்தில் வானத்தைப்போல சீரியலும், 4-ம் இடத்தில் கண்ணான கண்ணே சீரியலும், 5-ம் இடத்தில் ரோஜா சீரியலும், 6-ம் இடத்தில் எதிர்நீச்சல் சீரியலும் இருக்கிறது. அதன்பிறகு 7-ம் இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலும், 8-ம் இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் சீரியலும், 9-ம் இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியலும் இருக்கிறது. அதன்பிறகு 10-வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருக்கிறது. மேலும் இந்த 10 சீரியல்களில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா போன்ற சீரியல் முடிவடைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.