2021ல் நடக்கவிருக்கும்…. அதிர்ச்சிகரமான நிகழ்வுகள்…. பாபா வங்காவின் கணிப்புகள்…!!

2021 ஆம் வருடத்திற்கான  பாபா வாங்காவின் அதிர்ச்சிகரமான கணிப்புகள் வெளியாகியுள்ளன. 

பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பாபா வங்கா தனது 12 வயது வரை நன்றாக இருந்துள்ளார்.  அதன் பின்னர் அவரது கண் பார்வை குறைந்துள்ளது. பின் முழுமையாக பார்வையை இழந்து விட்டார். உலகில் நடைபெறப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து விடுவார் இந்த பாபா வங்கா. மேலும் அவர் கூறும் அனைத்து நிகழ்வுகளும் நடந்துள்ளது. இந்நிலையில் 1996 வருடம் பாபா வங்கா உயிரிழந்துள்ளார்.

ஆனால் அவர் இறப்பதற்கு முன்பே பல நிகழ்வுகளை கணித்து கூறியுள்ளா.ர் இந்நிலையில் அவர் 2021 ஆம் வருடம் நடைபெறப்போகும் நிகழ்வுகளை கணித்துள்ளார். அதன்படி,  மஸ்லின் தீவிரவாதிகள் ஐரோப்பாவின் மீது படையெடுப்பர். மேலும் மஸ்லின் படையெடுப்பாளர்களிடம் ரசாயனத்தின் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனைதொடர்ந்து 2021 ஆம் வருடத்தில் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை ஐரோப்பா அடைய இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்காவின் அதிபராக இருக்கும் டொனால்டு டிரம்ப் காது கேளாமை மற்றும் மூளை பிரச்சனை சம்பந்தமான ஒரு மர்ம நோயினால் பாதிக்கப்படுவார். மேலும் இந்த உலகத்தில் உயிர்கள் எவ்வாறு தோன்றியுள்ளது என்பது பற்றி தெரியவரும். சூரிய ஒளியினால் மட்டுமே ரயில்கள் இயங்கும் பெட்ரோல் உற்பத்தி நிறுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். ஒரு வலிமைமிக்க டிராகன் மனிதர்களை தாக்கும். மேலும் மூன்று ராட்சதர்கள் ஒன்றிணைவர். சில மக்களிடம் சிவப்பு பணம் அவர்களிடம் காணப்படும் என்றும் கணித்து கூறியுள்ளார்.

மேலும் புற்றுநோயிலிருந்து மனிதர்கள் முற்றிலுமாக விடுபட்டுவிடுவர். அதாவது புற்றுநோயை இரும்புச் சங்கிலியால் கட்டப்படும் நாள் வந்துவிட்டது என்றும் கணித்துள்ளார். இவர் டிராகன் என்று குறிப்பிட்டுள்ளதை சீனா என்று சிலர் கூறுகின்றனர் மேலும் மூன்று ராட்சதர்கள் என்று அவர் கூறியது இந்தியா சீனா ரஷ்யா ஆகிய நாடுகள் ஆக இருக்கலாம் சிவப்பு பணம் என்று கூறியிருப்பதால் சீனாவின் யுவான் நோட்டுகளை தான் குறிக்கிறது என்று சிலர் கருதுகின்றனர்.