2019 உலக கோப்பை – ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு… 15 வீரர்கள் யார் தெரியுமா…!!

2019 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில்  நடக்கிறது. இந்த போட்டியில்  நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

Image result for 2019 உலகக்கோப்பை

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் உலககோப்பையை எதிர்கொண்டு  காத்திருக்கின்றனர். ஏற்கனவே நியூசிலாந்து அணி வீரர்களை தேர்வு செய்து விட்டது. இந்திய அணி இன்று மும்பையில் தேர்வு செய்ய இருக்கிறது.இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளது.குறிப்பாக  பந்தை சேதப்படுத்தியதற்க்காக ஓராண்டு தடை விதிக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோரும் இதில் இடம் பிடித்தனர்.

அதில்  உஸ்மான் க்வாஜா, டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரே, பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜியெ ரிச்சர்ட்சன், நாதன் கோல்டர் நெய்ல், ஜேசன் பேஹ்ரெண்டார்ப்,  நாதன் லியான், மற்றும் ஆடம் ஸம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.