இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார்.

2007 டி20 உலகக் கோப்பையில் ரோஹித்தை சந்தித்தபோது அவரது முதல் தோற்றத்தை அவர் நினைவு கூர்ந்தார். ரோஹித் சர்மா களத்திற்கு வெளியே நல்ல மனிதர் என்று  கூறினார்.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியதாவது, ரோஹித் சர்மாவை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் அறிமுகமானார். டீம் பேருந்தில் என் இருக்கைக்குப் பின்னால் அவர் அமர்ந்திருப்பார். ரோஹித் மும்பை ஸ்டைலில் (‘கைசா ஹை ரெ தூ?’ மற்றும் ‘கைசா ஹை ஷானே?’) பேசியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இவரின் ஆட்டத்தை பார்த்த பிறகு உலக கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக வருவார் என்பது உறுதியாக எனக்கு தெரியும். அவர்  பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை இப்போது நாம் பார்க்கிறோம். ரோஹித் நல்ல பேட்ஸ்மேன்.. ஆனால் பத்து மடங்கு சிறந்த மனிதர். சிறந்த ஆளுமை கொண்டவர். ஐபிஎல் வரலாற்றில் மிக வெற்றிகரமான கேப்டன் ரோஹித் சர்மா என்றார்.

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) கேப்டனாக ரோஹித் ஷர்மாவின் மகத்தான சாதனையை எடுத்துக்காட்டிய ஹர்பஜன் சிங், எம்எஸ் தோனியுடன் இணைந்து மிகப்பெரிய கேப்டன்களில் ஒருவராக நட்சத்திர பேட்டரை பாராட்டினார்.   மேலும் ஐபிஎல் வரலாற்றில் மிக வெற்றிகரமான கேப்டனாக இருந்தவர் ரோஹித் சர்மா. தோனி மற்றும் ரோஹித் சர்மாவை விட பெரிய கேப்டன் யாரும் இல்லை. அவர் ஐந்து கோப்பைகளை வென்றுள்ளார், இது ஒரு பெரிய சாதனை. ஆம், அவருடன் எப்போதும் ஒரு நல்ல அணி உள்ளது, ஆனால் அவர் அணியை வழிநடத்தும் விதம் நம்பமுடியாதது என்று  விளக்கினார்.

ஹர்பஜன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நீண்ட காலம் ரோஹித் தலைமையில் விளையாடினார். பார்டர் கவாஸ்கர் டிராபியின் ஒரு பகுதியாக ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்டில் ரோகித் சர்மா (120) சிறப்பாக செயல்பட்டார். இந்தப் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 17ம் தேதி (இன்று) டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.