இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது. இந்த நோட்டுகளை வருகின்ற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை மக்கள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதேசமயம் பெட்ரோல் பங்குகள் மற்றும் ஒரு சில பெரிய வணிக நிறுவனங்களில் மட்டும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்குகின்றனர்.

இருந்தாலும் மக்களின் இந்த சிரமத்தை போக்க அமேசான் புதிய வசதியை தற்போது ஏற்படுத்தியுள்ளது. மக்களிடம் தங்களின் வீட்டுக்கே அமேசான் நிர்வாகி வந்த 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்வார் என்றும் அதனை அமேசான் பே செயலியில் வரவு வைத்துக் கொள்ளவும் வழிவகை செய்துள்ளது. மேலும் பொருட்கள் வாங்கவும் 2000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது.