அரியலூரில் ரோட்டில் சுற்றிய 200 பேர் மீது வழக்கு பதிவு …!!

144 தடை உத்தரவை மீறி பைக்கில் சுற்றி திரிந்த 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகளை வாங்குவதை  தவிர வேறு எதற்கும் வெளியே வரவேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கும் என்றும் மத்திய மாநில அரசுகள் உறுதியளித்துள்ளன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு, 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டும் ஆங்காங்கே பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவு மீறுவதாகவும், 144 தடை உத்தரவை அமல்படுத்துவதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்திருந்தார்.

இதே நிலைமைதான் தமிழகத்திலும் நீடிக்கின்றது. காலை முழுவதும் தேவையில்லாமல் இருசக்கர வாகனகளில் வெளியே சுற்றி வருபவர்களை போலீசார் கெஞ்சி வீட்டுக்கு அனுப்பிய சம்பவமும், நடவடிக்கை எடுத்து எச்சரிக்கை விடுத்த சம்பவமும் ஆங்கங்கே நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறி அரியலூரில் சாலைகளில் பைக்கில் சுற்றி திரிந்த  200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 200 இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *