“200 கி.மீ ஸ்பீடு”…. படுக்கை வசதிகள்… வந்தே பாரத் ரயிலில் வரும் புது வசதிகள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகிறது. தற்போது இந்த தொழிற்சாலையில் படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட இருப்பதாக ஐசிஎஃப் பொது மேலாளர் கோபிநாத் மால்யா கூறியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கோபிநாத் மால்யா, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் 115 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க அனுமதி கிடைத்துள்ளதாக கூறினார்.

அதன் பிறகு இதுவரை 21 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது 180 கிலோமீட்டர் வேகத்திற்கு வந்தே பாரத் ரயில்களை இயக்க அனுமதி கிடைக்கப்பட்டு  160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. அடுத்த 3 வருடங்களுக்குள் 200 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட  இருக்கிறது. மேலும் படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் இந்த நிதி ஆண்டுக்குள் தயாரிக்கப்படும் என்று கூறினார்.