20 ஆண்டா இப்படி இல்ல ”புலம்பும் மோட்டார் நிறுவனம்” வாகன விற்பனை சரிவு…!!

ஜூலை மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக  இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 31 சதவீதம் சரிவை கண்டு வெறும் 2,00,690 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாகன விற்பனை சரிவால் உற்பத்தியும் 17  17% குறைந்துள்ளது. வர்த்தக வாகன விற்பனையில் 25.7 சதவீதமும் , இருசக்கர வாகன விற்பனை 16.8 சதவீதமும், கார்கள் விற்பனை 36 சதவீதமும் குறைந்துள்ளது.

Image result for வாகன உற்பத்தி சரிவு

இது உள்நாட்டு உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தியதாக சி.எம்.ஐ. இ எனும் பொருளாதார  ஆய்வு நிறுவனம் குறிப்பு குறிப்பிட்டுள்ளது. இதன் எதிரொலியாக வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்துள்ளதாக இத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 5.6 சதவீத இருந்த வேலையில்லாத் திண்டாட்டம் தற்போது 7.5 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Image result for வாகன உற்பத்தி சரிவு
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் மக்களின் வாங்கும் திறன் குறைவு போன்றவையே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. கடும் நெருக்கடியில் இருக்கும் ஆட்டோமொபைல் துறையை ஊக்கப்படுத்தும் வகையில் வரிச்சலுகை , வாடிக்கையாளருக்கு எளிய முறை கடன் வசதிகள் அறிவிக்க  வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.