அமெரிக்காவின் வணிக வளாகம் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 20 பேர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள வடக்கு கலிபோர்னியாவில் கடந்த ஞாயிற்று கிழமை நடந்த உணவு திருவிழாவிழா நடந்த துப்பாக்கிசுட்டு சம்பவத்தில் 3 பேரும் , மிஸ்ஸிஸிப்பியில் வணிக வளாகத்தில் கடந்த செவ்வாய் கிழமை நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவைஅதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்த விசாரணை நடைபெறு வருகின்றது. அடுத்தடுத்துக்கு நடந்த இந்த இரண்டு சம்பவத்தின் வலி தீருவதற்குள் மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள எல் பேஸோ நகரில் அமைந்த வணிக வளாகம் ஒன்றில் திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் பரிதாபமாக 20 பேர் பலியானார்கள். மேலும் 26 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து நடைபெற்ற விசாரணையில் இந்த சம்பவத்தை அரங்கேற்றியது 21 வயதுடைய பேட்ரிக் கிரஸ்சியஸ் என்று சொல்லப்படுகின்றது. மேலும் சந்தேகத்தின் பெயரில் 3 பேரை கைது செய்துள்ளது அந்நாட்டு போலீஸ்.இந்த சம்பவத்திற்கு அதிபர் டிரம்ப் கண்டனம் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவத்தை அமெரிக்கா அதிர்ச்சியடைந்துள்ளது.