மினி பஸ் கவிழ்ந்ததில் 20 பேருக்கு காயம் …

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே, மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர் .

ஆலங்குளதிற்கு  சென்று கொண்டிருந்த மினி பஸ் , துத்திக்குளம்  சாலை அருகே வளைவில் அதிவேகத்தில் திரும்பியபோது,  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில்   ஓட்டுனர் அருள்ராஜ், நடத்துநர் பால்ராஜ் மற்றும் 23 பயணிகள் காயமடைந்தனர்.

injury க்கான பட முடிவு

ஆலங்குளம் அரசு மருத்துவமனை மற்றும் பாளையங்கோட்டை மாவட்ட மருத்துவமனைகளில், அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் .இதுக்குறித்து  ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர் .