சுற்றுலா பயணிகளை கவர்ந்த 20 அடி உயர பிரட்கேக்…!!

கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனியார் நட்சத்திர ஹோட்டலில் தயாரிக்கப்பட்டுள்ள 20 அடி உயரம் கொண்ட ஐரோப்பிய ஜிஞ்சர் பிரட்கேக் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் கொடைக்கானல் வன்னமட்டுவப்பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் ஐரோப்பியர்களால் விரும்பி சுவைக்கப்படும் 20 அடி உயர ஜிஞ்சர் பிரட்கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.  கொடைக்கானலில் நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் ஜேர்மன் சர்ச் சிலை முன்னோட்டமாக கொண்டு இந்த கேக் உருவாக்கப்பட்டுள்ளது.

Image result for german church cake

 

இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்பியும் எடுத்துக் கொண்டனர்.ஐரோப்பியர் ஜிஞ்சர் பிரட் கேக் உடன் ஹோட்டலில் 25 அடி உயரே தொங்கும் கிறிஸ்துமஸ் மரமும் உருவாக்கப்பட்டுள்ளது.  இதனை ஜனவரி முதல் வாரம் வரை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம் என ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *