நடிகைகள் தற்போது தற்கொலை செய்து கொள்வது என்பது ஒரு சாதாரண விஷயமாகவே மாறிவிட்டது. பட வாய்ப்பு இல்லாத நிலையிலோ அல்லது காதல் விஷயங்கள், மன அழுத்தம் போன்றவற்றால் செய்து கொள்ளும் சம்பவங்கள் நீடித்து வருகிறது இதில் சிலரின் தற்கொலை செய்திகள் இரண்டு வாரங்கள் அனைவராலும் பரவலாக பேசப்பட்டு அதன் பிறகு அப்படியே மறந்து விட்டு அடுத்த விஷயத்திற்கு சென்று விடுவார்கள். ஆனால் ஒரு நடிகை இறந்து 20 வருடங்களாகியும் இன்னும் அவருடைய மரணம் குறித்த விஷயங்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது.

நடிகை மோனல் கடந்த 2002 ஆம் வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மரணம் மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. மோனல் இறந்த சமயத்தில் நடிகை சிம்ரன் அவருடைய மரணத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்தார். ஆனால் அப்போது பல்வேறு வதந்தியான தகவல்கள் பரப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் மோனலின் தற்கொலை செய்தி வெளிவர தொடங்கியதுமே நடிகை மும்தாஜ் மோனாலின் வீட்டிற்கு சென்று முக்கிய டைரி ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து விட்டாராம்.

மும்தாஜ் கலா மாஸ்டர் இரண்டு பேரும் நெருங்கிய தோழிகள் என்பது அனைவருக்குமே தெரியும். இந்த நிலையில் தற்போது சிம்ரனின் சந்தேகம் வேறொரு நடிகர் மீது திரும்பியுள்ளது அது வேறு யாருமில்லை விஜய் மற்றும் மோனல் நடித்த திரைப்படமான பத்ரி படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்த ரியாஸ்கான் மீதாம் ஏனென்றால் மோனல் இறப்பதற்கு முன் அவரிடம் ரியாஸ் கான் தான் கடைசியாக பேசியிருக்கிறார். இன்னும் இந்த தற்கொலைக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்க முடியவில்லையாம்.