தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியரான குராலா சர்ஜோஜனமா. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லையாம். ஆனால் இவருக்கு சொத்துக்கள் அதிகமாக இருந்துள்ளது. இதனால் தனது சொத்துக்கள் அனைத்தையும் ஆசிரியர் நல அமைப்புகளுக்கு எழுதி வைத்துள்ளார்.
ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்திற்கு சொந்தமாக கட்டடம் இல்லாததால் தன்னுடைய ரூ.2 கோடி மதிப்புள்ள வீட்டை அதற்கு கொடுத்துவிட்டார். மேலும் அனாதையாக இறப்பவர்களுக்கு இறுதி காரியங்களை நிர்வகிக்கும் விதமாக தர்ம மடம் ஒன்றை தொடங்கி அதற்கு ரூ.20 லட்சத்தை நன்கொடையாக கொடுத்துள்ளார்.