குளிர்பானம் என நினைத்து…. ரசாயன திரவம் குடித்த 2 வயது குழந்தை இறப்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியில் விசைத்தறி பட்டறை உரிமையாளரான தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் துணிகளில் ஏற்படும் கரைகளை அகற்றுவதற்காக ரசாயன திரவம் கலந்த பொருட்களை உபயோகப்படுத்துவது வழக்கம். இதற்காக ரசாயன திரவம் கலந்த பொருட்களை தங்கராஜ் வீட்டில் வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் தங்கராஜன் 2 வயது ஆண் குழந்தை குளிர்பானம் என நினைத்து பாட்டிலில் வைத்திருந்த ரசாயன திரவத்தை குடித்து மயங்கி விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply