2 சக்கர வாகன விற்பனை….. இந்தியாவில் சரிவு….. புள்ளி விவரத்தை வெளியிட்ட முன்னணி நிறுவனங்கள்…!!

கார் விற்பனையில் ஏற்பட்ட சரிவை தொடர்ந்து கடந்த வருடம் இரு சக்கர வாகனங்களின் விற்பனையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த டிசம்பர் மாதம் தங்களது உள்நாட்டு விற்பனை பல மடங்கு குறைந்துவிட்டது என முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களான ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆகியோர் தெரிவித்தனர்.

2018 ஆம் ஆண்டு 4,36,596 பைக்குகளை விற்ற ஹீரோ ஹோண்டா கடந்த ஆண்டு 4,12,000 பைக்குகளை மட்டுமே  விற்பனை செய்துள்ளது. பஜாஜ் இருசக்கர வாகனங்களின் விற்பனை 20 சதவீதம் குறைந்த நிலையில் டிவிஎஸ் நிறுவனம் 25% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதேசமயம் தங்களது விற்பனையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *