தொடரும் புல்வாமா தாக்குதல்…..2 தீவீரவாதிகள் சுட்டுக் கொலை..!!

புல்வாமா பகுதியில் தீவீரவாதிகளுக்கும் இந்தியா ராணுவ வீரர்களுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 2 தீவீரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் .

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று புல்வாமா தாக்குதலானது இந்தியாவில் நடைபெற்றது. இதில் ஒரே நேரத்தில் 44 crpf ராணுவ வீரர்கள் குண்டு வெடித்ததில் வீரமரணம் அடைந்தனர் . இச்சம்பவமானது இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு இந்தியாவில் முக்கிய பகுதிகளில் குண்டு வெடிப்பு அச்சுறுத்தல்களும், அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்களும்  நடைபெற்று வந்தது.

Image result for terrorist attack india

ஆகையால் ராணுவ வீரர்கள் முக்கிய இடங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி  தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். மேலும் எல்லைப் பகுதிகளில் அவ்வப்போது ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு கொண்டுவந்திருந்தது.

இந்நிலையில் மீண்டும் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நுழைந்து இந்திய ராணுவ வீரர்கள்  மீது தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரமாக நடைபெற்ற இந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகள் இந்திய ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீண்டும் pulwama பகுதியானது அமைதி பெற்றுள்ளது.