லிப்டில் சிக்கி தவித்த 2 பேர்…. ராட்சத எந்திரம் மூலம் மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சின்மயா நகர் பகுதியில் 2 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இந்நிலையில் குடியிருப்பில் இருக்கும் லிப்டில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் 2 பேர் நீண்ட நேரமாக உள்ளே சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ராட்சத எந்திரங்களை கொண்டு லிப்டின் கதவுகளை அறுத்து உள்ளே சிக்கி இருந்த பத்மநாபன், பிரகாஷ் ஆகிய இருவரையும் பத்திரமாக மீட்டனர். துரிதமாக செயல்பட்டு லிப்டில் சிக்கி இருந்தவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.