யாருடா நீங்கெல்லாம்…? செய்வதரியாது திணறிய வாலிபர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

இளைஞரை அரிவாளால் வெட்டிய வழக்கில் காவல்துறையினர் மேலும் 2 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒலியமங்களம் வெள்ளாளப்பட்டி கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வினோத் தனது இருசக்கர வாகனத்தில் கொங்குப்பள்ளம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது வினோத்தை பின் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அவரை வழிமறித்துள்ளனர்.

அதன்பின் வினோத்தை அவர்கள் அரிவாளல் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளிகளை தேடி வந்த காவல்துறையினர் தற்போது இருவரை கைது செய்துள்ளனர். அவர்கள் திருவப்பூர் அம்பாள்புரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் மச்சுவாடி வண்டிப்பேட்டை கிராமத்தை சேர்ந்த வீரையாவை என்பது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *