“காய்கறி மூட்டைக்குள் இதுதான் இருக்குதா” வசமாக சிக்கிய 2 பேர்…. கைது செய்த போலீஸ்….!!!

காய்கறி மூட்டைக்குள் மறைத்து வைத்து குட்கா பொருட்கள் கடத்தி சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் சென்றன. எனவே காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அதில் பெங்களூருவில் வசித்து வரும் விவேக் மற்றும் சுனைத்கான் ஆகிய 2 பேரும் ராஜபாளையத்திற்கு காய்கறி கொண்டு செல்வதாக கூறினார்.

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் லாரியில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்துள்ளனர். அப்போது காய்கறி மூட்டைக்கு இடையில் வைத்து குட்கா பொருட்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்த செய்ததோடு அவர்களிடம் இருந்த ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *