“எப்படியும் எங்களை கண்டுபிடிச்சுடுவாங்க” விசாரணையில் வெளிவந்த உண்மை…. கைது செய்த போலீஸ்….!!!

வாலிபரை கல்லால் தாக்கி கொலை செய்த நண்பர்கள் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் 2 பேர் வந்து சரணடைந்தனர். எனவே காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் துரைப்பாக்கத்தை சேர்ந்த சதீஷ், மணி ஆகிய 2 பேர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களின் நண்பரான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அருண் என்பவருடன் சேர்ந்து முட்புதரில் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது தங்களுடைய செல்போனை அருண் திருடி விட்டதாக கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். அந்த தகராறில் ஆத்திரமடைந்த சதீஷ், மணி ஆகிய இருவரும் அருகில் கிடந்த கல்லை எடுத்து அதனை அருணின் தலையில் போட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் மறுநாள் வந்து பார்த்த போது அருண் இறந்து கிடந்துள்ளார்.

ஆகவே காவல்துறையினர் எப்படியும் தங்களை பிரித்து விடுவார்கள் என்று பயந்து போன இருவரும் வக்கீல் ஒருவரின் உதவியுடன் காவல் நிலையத்தில் வந்து சரண் அடைந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் கொலை நடந்த இடம் புதர் நிறைந்த பகுதி என்பதால் இது பற்றி யாருக்கும் தெரியவில்லை. இதனையடுத்து கொலை நடந்த இடத்திற்கு காவல்துறையினர் சென்று அருணின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணி, சதிஷ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *