போலீசில் சிக்காமல் இருப்பது எப்படி….? யூடியூப் பார்த்து நகை பறித்த 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் திருவள்ளுவர் சாலை பகுதியைச் சேர்ந்த ராதா என்பவர் கெருகம்பாக்கத்தில் இருக்கும் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ராதா அணிந்திருந்த 4 பவுன் தங்கநகை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் நெற்குன்றத்தை சேர்ந்த விஜய், அவரது நண்பர் தமிழன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது இரண்டு பேரும் போலீசாரிடம் சிக்காமல் இருப்பது எப்படி என்பது குறித்து யூடியூபில் வீடியோ பார்த்துள்ளனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் கிளம்பும் 2 பேரும் ஹெல்மெட் அணிந்து கொண்டும், பல்வேறு பகுதிகளுக்கு செல்லும்போது உடைகளை மாற்றிக் கொண்டும் சுற்றி வந்து நகைப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.