நடந்து சென்ற வாலிபர்…. கத்தியை காட்டி பணம் பறித்த இருவர்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் குடியிருப்பு கிராமத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்மராஜ் என்ற மகன் உள்ளார். நேற்று தர்மராஜ் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டன், ராஜதுரை ஆகிய இருவரும் தர்மராஜை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

மேலும் அவரிடமிருந்த 1,500 ரூபாயை பறித்து கொண்டு இரண்டு பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து தர்மராஜ் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜதுரை மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.