தீவிர ரோந்து பணி…. சிறுவர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

கஞ்சா புகைத்து கொண்டிருந்த குற்றத்திற்காக சிறுவன் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிலையம் அருகில் 2 பேர் கஞ்சா புகைத்து கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் வல்லரசு மற்றும் 18 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வல்லரசு மற்றும் அந்த சிறுவனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *