கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அத்திமுகம் முனீஸ்வரர் கோவில் திருவிழா கடந்த 28- ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றுள்ளது. அப்போது திருவிழாவுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதே பகுதியில் வசிக்கும் வினோத்குமார்(26), வினய்(22) ஆகியோர் பேசியுள்ளனர். இதனை அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கண்டித்தனர். ஆனாலும் இருவரும் ரகளை செய்து அதே பகுதியைச் சேர்ந்த மோகன்(42), கோவிந்தராஜு(28) ஆகிய 2 பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த இருவரும் ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வினை மற்றும் வினோத்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.