மது போதையில் ரகளை செய்த வாலிபர்கள்…. ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரில் முகைதீன் அப்துல் காதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் முகைதீன் வள்ளியூர் காந்திஜி காலனியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது மனோஜ்(20), மாணிக்கம்(20) ஆகிய இரண்டு வாலிபர்களும் மதுபோதையில் ஆட்டோவை வழிமறித்து முகைதீனுடன் தகராறு செய்தனர்.

மேலும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கட்டையால் ஆட்டோவின் கண்ணாடியை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து விட்டு இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து முகைதீன் வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மனோஜ், மாணிக்கம் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.