கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குருவிநாயகனப்பள்ளி பகுதியில் முத்தப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் இவரது சகோதரரான செல்வத்துக்கும் இடையே நில பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்தது. கடந்த 23-ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுகுறித்து முத்தப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்வம், அவரது மனைவி மீனாட்சி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதே போல அமாவாசை என்பவர் தன்னையும், செல்வத்தையும் முத்தப்பன் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் முத்தப்பன் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.