” மண் அள்ளி கொண்டிருந்த 2 பேர்” திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மின்சாரம் தாக்கி வாலிபர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் காளிமுத்து என்பவரது மகன் வீரக்குமார் வசித்து வந்துள்ளார். மேலும் திண்டுக்கல்லில் காளிராஜ் என்பவரது மகன் அஜித்குமார் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் பள்ளப்பட்டி பகுதியில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் மந்தை தெரு அருகில் குடிநீர் குழாய் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்பகுதியில் கம்பத்திலுள்ள மின் இணைப்பு மூலம் பேக்கஸ் லைட் கட்டி ஜே.சி.பி எந்திரம் மூலம் குழி தோண்டி கொண்டிருந்தனர். இதில் அஜித் குமார் ஜே.சி.பி இயந்திரத்தை இயக்கினார். மேலும் வீரக்குமார் கீழே குழியில் உள்ள மண் அள்ளி கொண்டிருந்தார். அதே சமயம் போதிய வெளிச்சம் இல்லாததால் லைட்டை வேறு இடத்தில் மாற்றுவதற்காக அஜித்குமார் எடுத்த போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் அஜித் குமார் தடுமாறி கீழே வேலை செய்து கொண்டிருந்த வீரக்குமார் மீது விழுந்ததில் அவரையும் மின்சாரம் தாக்கியது. அதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இது குறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் அந்தப் பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *