ரகளை செய்தவர்களை தட்டி கேட்ட முதியவர்…. குடிசைக்கு தீ வைத்த 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மழையூர் பகுதியில் ரங்கசாமி-அம்மாகண்ணு தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இவர்களது வீட்டிற்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் ராமமூர்த்தி, ஜெகதீஷ் ஆகிய இருவரும் மது போதையில் ரகளை செய்தனர். இதனை ரங்கசாமி தட்டி கேட்டதால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து ரங்கசாமி அளித்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றதும் ரகளையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஜெகதீஷ் மற்றும் ராமமூர்த்தியின் தந்தை மணி ஆகியோர் ரங்கசாமியின் குடிசைக்கு தீ வைத்தனர். அப்போது கண்விழித்த ரங்கசாமி, அவரது மனைவி, பேரன் சூர்யா ஆகியோர் தீ எரிவதை பார்த்து அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதுபற்றி ரங்கசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜெகதீஷ் மற்றும் மணி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply