உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கிய… 2 குடோன்களுக்கு சீல்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!!!

தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் செயல்பட்ட இரண்டு குடோன்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற்று உணவு வணிகர்கள் தொழில் செய்ய வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் உரிமை வழங்கும் மேளா நடத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால் பல உணவு தொழில் சார்ந்த நிறுவனங்கள் உரிமம் இல்லாமல் இயங்கி வருகின்றது. இதனால் அதிகாரிகள் தூத்துக்குடி துறைமுக சாலையில் இருக்கும் குடோன்களில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

அப்போது அப்பகுதியில் இருந்த இரண்டு குடோன்களில் உணவு பாதுகாப்பு உரிமம் உல்லாமல் இயங்கியது தெரியவந்தது. இதுயடுத்து அதிகாரிகள் இரண்டு குடோன்களையும் பூட்டி சீல் வைத்தார்கள். உணவு பாதுகாப்பு துறையின் உரிமத்தை பெற்ற பின் உணவு வணிகம் செய்யலாம். இனி உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் உணவு தொழில் செய்வது குறித்து கண்டறியப்பட்டால் கடையை பூட்டி சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.

Leave a Reply