“சென்னையில் 2 நாட்கள் மழை பெய்யும்” வானிலை ஆய்வு மையம்..!!

சென்னையில் வெப்ப சலனம் காரணமாக 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது 

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வெயிலின் தாக்கத்தினாலும், மழை இல்லாததாலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் இல்லாமல் சென்னை மக்கள் தெரு தெருவாக அலைகின்றனர். இதனால் மக்கள் மழை எப்போது பெய்யும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Related imageஇந்நிலையில் சென்னை வானிலை மையம் சென்னையில் 2 நாட்கள் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது  என்று தெரிவித்துள்ளது. அதே சமயம் இன்று அனல் காற்று வீசும் என்றும், தமிழகம் முழுவதும்  15-ம் தேதிக்கு பிறகு வெப்பத்தின் அளவு படிப்படியாக குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.