2 நாளில் 500 தடவை ”சன்னி லியோனுடன் ” கதறிய வாலிபர்கள் …!!

சன்னி லியோனுடன் பேச வேண்டுமென்று இரண்டு நாட்களில் 500க்கும் மேற்பட்ட தவறான அழைப்பு வந்துள்ளதாக டெல்லி வாலிபர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

டெல்லியை சேர்ந்த புனித் அகர்வால் என்ற 26 வயதான வாலிபர் சிறிய வணிகத்தை நடத்திக் கொண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார்.  இவர் நேற்று மயூரா என்க்லேவ் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனக்கு ஓய்வு கிடைக்காத அளவுக்கு என்னுடைய  மொபைல் எண்ணுக்கு தேவையற்ற அழைப்புகள் வருகின்றது.கடந்த 2 நாட்களில் மட்டும் மொத்தமாக 500க்கும் மேற்பட்ட அழைப்புகளும் , மெசேஜ்சூம் வந்துள்ளது என்று புகார் அளித்தார்.

Image result for sunny leone arjun patiala

மேலும் , தொடர்பு கொண்ட அனைவரும் நாங்கள்  சன்னி லியோனுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளதாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். பின்னர் தான் புரிந்தது சமீபத்தில் வெளியாகிய  சன்னிலியோன் நடித்த “அர்ஜூன் பட்டியாலா” என்ற பஞ்சாபி பட காட்சியில் சன்னி லியோன் தனது மொபைல் நம்பர் என்று இந்த என்னை பயன்படுத்தியுள்ளார்.  சன்னிலியோன் பட காட்சியில் தெரிவித்த மொபைல் என்னை  12 வருடங்களாக  புனித் அகர்வால் பயன்படுத்தி வருகிறார். இதையடுத்துதான் அவருக்கு தவறான அழைப்புகள் வந்துள்ளன என தெரியவந்துள்ளது.