70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு… துணிச்சலாக குதித்து மீட்ட சிங்கப்பெண்கள்..!!

மதுரை மாவட்டத்தில் பசு மாட்டை காப்பாற்றுவதற்கு 70 அடி கிணற்றில் குதித்த இரண்டு பெண்களின் செயல் பாராட்டை பெற்று வருகிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டி என்ற கிராமத்தில் மாடசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். அவர் தனது பசுமாட்டை கிணற்றின் அருகே மேய்ச்சலுக்காக வழக்கம் போல் கட்டி வைத்துள்ளார். இந்த நிலையில் கிணற்றின் அருகே மேய்த்துக்கொண்டிருந்த பசுமாடு எதிர்பாராதவிதமாக மாடசாமியின் 70 அடி கிணற்றில் தவறி விழுந்தது. அதனைக் கண்ட மாடசாமியின் மனைவி புவனேஸ்வரி உடனடியாக மிகுந்த துணிச்சலுடன் கிணற்றில் குதித்துள்ளார். அவர் பசுமாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டவாறே கூச்சலிட்டு உள்ளார். அவரின் சத்தம் கேட்டு அருகில் இருந்த அனைவரும் ஓடிவந்து பார்த்தனர்.

பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு சம்பவம் பற்றி தகவல் கொடுத்தனர். பசுமாட்டை காப்பாற்றுவதற்காக கிணற்றிற்குள் போராடிக்கொண்டிருக்கும் புவனேஸ்வரியை கண்ட அவரின் தோழி சுதா என்பவரும் கிணற்றில் குதித்திருக்கிறார்.பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உசிலம்பட்டி தீயணைப்பு துறை அலுவலர்கள் கிணற்றுக்குள் தவித்துக்கொண்டிருந்த இரு பெண்களையும் மற்றும் பசு மாட்டையும் பாதுகாப்பாக மீட்டார்கள். இத்தகைய சம்பவமானது பசுமாட்டை மீட்ட மனிதநேய செயலாக மட்டுமின்றி நட்பின் இலக்கணமாகவும் அப்பகுதியில் பாராட்டை பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *