இலங்கை குண்டுவெடிப்பு :”சென்னையில் நிலவும் தொடர் பதட்டம் “கள ஆய்வில் 2 1/2லட்சம் கேமெராக்கள்

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்திலும்  வருவதால் காவல்துறையினர் தீவீர சொதன்னில்  வருகின்றனர் 

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தால் 253 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ள நிலையில் அண்டை நாடுகளிலும் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்படலாம்  என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது இலங்கையில் இருந்து வரக்கூடிய பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மேலும் சென்னையில் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் சந்தேகத்திற்கு உரிய வகையில் யாரேனும் நடமாடுகிறார்கள் என்று தீவிர சோதனையில் சென்னை காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்

இந்நிலையில் கள ஆய்வில் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள்  ஈடுபடுத்தப்பட்டுள்ளது மேலும் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஹாசன் குண்டு வெடிப்புக்கு முன்பு சென்னையில் உள்ள வண்டி பகுதியில் மர்ம நபர் ஒருவரை சந்தித்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சென்னை மாநகர பகுதிக்குள் சந்தேகிக்கும் வகையில் யாரேனும் சுற்றி திரிந்தால் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடமும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது