2 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை…. கொத்தனார் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

2 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்த கொத்தனார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கொத்தனாரான இளவரசன்(43) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 2 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த குழந்தையின் பெற்றோர் ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல்துறையினர் இளவரசனை கைது செய்தனர். இவர் ஏற்கனவே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *