2 லட்சம் காப்பீட்டில் 5.25 லட்சம் வருமானம் எவ்வாறு பெறுவது?…. வாங்க பார்க்கலாம்…..!!!!

எல்ஐசி ஜீவன் லாப் பாலிசி இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தால் வழங்கப்படும், பாதுகாப்பு மற்றும் சேமிப்பு என இரண்டையும் வழங்கும் ஒரு திட்டமாகும். முதலாவது வெஸ்டட் சிம்பிள் ரிவிஷனரி போனஸ் மற்றும் இரண்டாவது ஃபைனல் அடீஷனல் போனஸ் ஆகும்.  இந்தக் பாலிசியை  எடுக்க குறைந்தபட்ச வயது 8 வயதாக இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் மூன்று பிளான்கள் உள்ளன.

1. 16 வருட பாலிசியாகும்

இந்த பாலிசியில் நீங்கள் 10 வருடம் பணம் கட்டினால் போதும்.

2. இரண்டாவது திட்டம் 21 பாலிசி காலமாகும்
இந்த பாலிசியில் 15 வருடம் நீங்கள் பிரீமியம் செலுத்தினால் போதுமானது.

3. மூன்றாவது 25 வருட பாலிசி காலமாகும்
இந்த திட்டத்தில், 16 வருடம் பிரீமியம் செலுத்தினால் போதுமானது.

பாலிசியின் சிறப்பம்சங்கள்: 

இந்த பாலிசியில் பங்கு சந்தை அபாயங்கள் எதுவும் கிடையாது. மேலும் இந்த பாலிசி காலம் முதிர்வு வரை பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை. குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்தை திட்டமிடுவதற்கான சிறந்த பாலிசியாகவும் பார்க்கப்படுகிறது. இதனுடன் ரைடர்ஸ் பாலிசிகளையும் பெற்றுக் கொள்ளும் அம்சமும் இதில் உண்டு.

இது தவிர இந்த பாலிசியில் 80C கீழ் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. முதிர்வு தொகைக்கு 10 (10D)யின் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த பாலிசியினை பொறுத்தவரையில் குறைந்தபட்சம் 2 லட்சம் காப்பீடாகும். அதிகபட்ச வரம்பு என எதுவும் இல்லை. இந்த பாலிசி எடுத்த 3 ஆண்டுகளுக்கு பிறகு கடன் பெற்றுக் கொள்ளும் வசதி உண்டு. மேலும் இந்த பாலிசி பிரீமியம் அடிப்படையில் தள்ளுபடியும் உண்டு.

உதாரணமாக, 30 வயதில் இத்திட்டத்தில் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். பாலிசி காலம் 25 ஆண்டுகள். மாதம் 800 ரூபாய் மட்டும் முதலீடு செய்தால் போதும். உங்கள் ஒட்டுமொத்த முதலீடு 1.5 லட்சம் ரூபாய். அதேபோல் 1000 ரூபாய்க்கும் 47 ரூபாய் போனஸ் கிடைக்கும். மெச்சூரிட்டியில் 90,000 ரூபாய் கூடுதல் போனஸ் கிடைக்கும். கடைசியில் ஒட்டுமொத்தமாக 5.25 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *