
தமிழகத்தில் பொதுவாக முக்கிய பண்டிகை நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இன்று இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திலும், உத்தரகோசமங்கை கோவில் திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.