+2 மாணவர்களே போனா திரும்ப கிடைக்காது…. உடனே APPLY பண்ணுங்க….. முக்கிய அறிவிப்பு…!!!

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் வேலை வாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக தொழிலாளர் கல்வி நிலைய இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த விருப்பமுள்ள மாணவர்கள் பட்ட படிப்பிற்கும், ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்டம் மற்றும் பட்டய படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த் மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதற்கான விண்ணப்பமானது கடந்த எட்டாம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. பொதுபிரிவினர் 200 ரூபாயும், பட்டியலின மாணவர்கள் 100 ரூபாயும் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை) முனைவர் இரா. ரமேஷ்குமார், இணைபேராசிரியர் Mobile NO. 9884159410 தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் மின்வாரிய சாலை, மங்களபுரம் (அரசு ஐ.டி.ஐ பின்புறம்) அம்பத்தூர், சென்னை – 600 098ஐ அணுகலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply