2 குழந்தைகளை தவிக்கவிட்டு…. தாய் எடுத்த விபரீத முடிவு…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சகாய மாதா தெருவில் மீனவரான ராபின்ஸ்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரேகா தனது வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரேகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரேகா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.