சென்னை பெரியபாளையம் அருகே அரும்பாக்கம் பகுதியில் ஒரு 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் 11ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வினோதினி என்ற 28 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் வினோதினிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறது. இவருடன் அந்த மாணவன் அக்கா அக்கா என்று பேசி பழகி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் வினோதினிக்கு சிறுவன் மீது ஆசை வந்தது. அவர் தனக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது என்பதை மறந்து விட்டு செய்வினை காதல் வலையில் ஆசை வார்த்தைகளை பேசி வீழ்த்தினார்.

இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக பள்ளிக்கு சென்ற சிறுவன் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வினோதினி மாணவனை அழைத்து சென்றது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் ஒரு கிராமத்தில் ஒரு வீட்டில் தனியாக தங்கி இருப்பது தெரியவந்த நிலையில் காவல்துறையினர் அங்கு சென்று இருவரையும் பிடித்தனர். இதில் வினோதினியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.