மதுரை அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை மற்றும் சிவகங்கை சாலையில் பூவந்தி அருகே அதிவேகமாக வந்த இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மதுரை தலைமை அஞ்சல் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரி இக்னோசியஸ் ரொசாரியோ உள்ளிட்ட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.